பேட்டா ராப்

யாதும் ஊரே யாவரும் கேளீர் !

Tuesday, August 22, 2006

வணக்கம் வாத்யாரே...!

வணக்கம் வாத்யாரே...!

நல்லா கீரியா..!

இன்னாமா யிது புத்சா கீது யிந்த பத்ரிக்கனுதானே முய்க்கீறே..ஆமா புத்சுதான்! "பேட்டா ராப்"னு பேரு வச்சிருக்கேன் எப்டி கீது?

அப்புறம்.... இன்னாடா இவன்லாம் எய்த ஆரம்பிச்சா நாடு உருப்புடுமானுதானே பாக்குறே....எய்தவேண்டியவங்க ஒய்ங்கா எய்துனா அப்பால நா எதுக்கு பேனா தூக்கணும்..மாமே !

கவல்படாதே நைனா,நம்ம மன்ஸ்ல் அய்க்கில்ல அதால எய்த்லயும் அய்கிருக்காது.

ரொம்ப வருஷத்துக்கு முன்னால் குஜாலா இருந்தேன்.எங்காத்தா டவுனுக்கு போனா முட்டாயி,பிஸ்கோத்துக்கு பதிலா நல்ல கத புஸ்தகமா வாங்கியாரும்.எம் புள்ள பட்ச்சி அறிவாளியாவட்டும்னு அவ்ளொ ஆசை.இப்ப இன்னாடானா திடுப்புனு புஸ்தகம் வாங்கியாரத வுட்ருச்சி !
ஏ...யாத்தானு நான் கேக்கல, ஏன்னா எனக்கே மேட்டர் தெரியுமே...?

இன்னானு கேக்கிறியா?

அட எந்த புஸ்தகமோ பேப்பரோ,ஒரு ரேப் நியுஸ்,ஒரு கீப் நியுஸ் இல்லாம க்கீதா..? எதுவும் இல்லாங்காட்டியும் கூட விட மாட்றீங்கல்ளே...எவளோடயாவது, எவனையோடவாவது சேத்து மேட்ட்ர் பண்ணீடறீங்களே...

நா மேட்டருனு சொன்னது, நீங்க பண்ற நீயுஸதான்.

முன்னலாம் புள்ளைங்க புக்ஸ படிச்சி காமிச்சா பெத்தவங்களுக்கு புல்லரிச்சி போவும், இப்ப இன்னாடானா பேய்யச்சா மாதிரி முய்க்கிறாங்க..,இப்டிதான் எட்டு வயசு எங்கக்கா பையன் ஒரு எழவு புடிச்ச புக்க எழுத்துக்கூட்டி படிச்சிட்டு, ரேப் பண்றதுனா இன்னா மாமானு கேக்குறான்!

ஆண்டவரே ! நான் இன்னா பதில சொல்வேன்.

மக்கா...உம்புள்ள இதே கேள்விய கேட்டா, நீ இன்னா பதில் சொல்வே..இல்ல கத்து கொடுப்பியா?...நீ கத்து குடுத்தாலும் குடுப்பே, ஏன்னா பத்திரிக்கை தர்மத்த ஏற்கனவே அதானே வாத்யாரே பண்ணிகிட்டு கீரே நீ...

யோவ் புண்ணியம் பண்ணவங்ன்களே! முன்னலாம் புள்ளைங்க புக்ஸ படிச்சி காமிச்சா பெத்தவங்களுக்கு வயித்துல பால் வாத்தா மாதிரி இர்க்கும் ! இப்ப நெருப்ப வாக்கறீங்களே..!துட்டு சம்பாரிக்க நம்ம இஸ்பெக்டயே காவு வாங்றீங்ளே ஞாயமா?

அப்பாலலாம் பலான பலான சமாச்சாரங்கள பிரிண்ட் பண்ணி பொஸ்தக கடையில மறைச்சி விப்பாங்க, இப்ப ஊட்டுக்குள்ளாறயே கொண்டாந்து வூடு கட்றீங்களே...! கட்வுளே...கட்வுளே!

இப்பலாம் நம்முர பாத்தா இது தமிழ்நாடா இல்ல தறுதல நாடானு கொயப்பமாவுது வாத்யாரே....!

போனவாரம் பெங்களுர் போயிட்டு மெட்ராஸ் பஸ்டாண்ட வந்து எறங்னா ஒரு போஸ்டரு என்ன கொல நடுங்க வச்சிடுச்சி மாமே....! அட நம்ம ஒலக அய்கி அய்ஸ்வர்யானு பாத்தா முதுக காமிச்சிகிட்டு போஸ் கொடுக்கறா..,

அவள உடுங்க பாவம்! அவ கூத்தாட வந்துட்டு மேட கோணல்னு பாக்க முடியாது...ஆனா அத்க்கு நம்ம ஆளுங்க குட்த்துகிற சப்-டயிட்லு கீதே...ங்கொக்க மக்கா! கொட்த்தவன் பெரீய க்ரீயேட்டிவ் தெலகம்தான்!

அடா...அடா ! பொம்பளைங்களுக்கு நல்லா மருவாதி பண்றீங்கடா....அது என்னப்பா.."ஒரு எளம் வெதவையின் காமத்தாகம்"

டோய்...... நாங்கேக்கிறேன்...எத்தனை வூட்ல எள வய்ஸ்லயே அர்த்துட்டு அன்னாடம் கேவி கேவியே வாய்க்கைய நட்த்தற அக்கா தங்கிச்சிங்க யிர்க்காங்க..அவுங்க மன்சு இன்னா கஸ்டப்படும்னு ரோஸனை பண்ணியாடா கஸ்மாலம்..! வூ வுட்ல ஒர்த்தி இப்டி இர்ந்தா உன்க்கு இப்டி ஒரு சப்-டயிட்லு வெக்க தோண்மா?

செர்தான்....இந்த கண்றாவிலாம் இப்டி கீதேனு வூட்ல டீவி பொட்டிய ஆன் பண்ணா அவனுங்க அமக்ளம் தாங்க முட்ல ! பிரண்ட் பொண்டாட்டிய எப்டி கரெக்ட் பண்றதுனு எபிசொட் போட்டூ சொல்லி தராணுங்க...இல்ல பொறந்த புள்ள கைல வேப்லைய குட்த்து ஆட விட்றானுங்க....கேட்டா ரேட்டிங்ல மொதல்ல வரணுமாம்..! அய்யா பெரியார் அய்யா நீங்க சீக்கிரமே பூட்டீங்க புண்ணியவா..ன் !

இவனுங்கள இன்னாடனு கேட்டா ரேட்டிங்ள பஸ்ட் வர்ணுமாம்...பிஸ்னஸ் போட்டியாம்.
அய்யோ சாமி நீங்க ரேட்டிங்கல மொதல்ல வர்ர ஊரு பூரா ரெட் லைட் போடாதீங்கடா...!

ஊர்க்கு உர்ப்படாத வயி காம்ச்சிட்டு,உம்புள்ளைங்கல மட்டும் ஒஸ்தி ஸ்கூலுல சேத்துடுங்க...நல்லா ஒய்ங்கா வள்ரும்.

யாரோ சொன்து இப்ப நென்ப்ல வர்து வாத்யாரே....மீட்யா நீங்கள்ளாம் சன்நாயகத்தோட நாலாவது தூணாம்!
மத்த தூணுங்க ஆட்டம் கண்டாகூட நீங்தான் தட்டிகேப்பிங்களாம்..இப்ப நீங்ளே ஆட்டம் குட்த்தா யார் தட்டி கேப்பா...? ஒண்ணு மட்டும் மன்சுல வச்சிக்கே மாமே ! உன்க்னு வயசாயிடும்,கொஞ்ச நாள்ல நீ பூடுவே,ஆனா நீ போட்ட ரோட்லதான் உம்புளளைங்க வர்ணும் மாமே,அவுங்க ஜெர்க் ஆவக்கூடாது,நென்ப்ல வெச்சிக்கோ...!

ஆமா! ஆது இன்னா நூறாவது நாள்னு போஸ்டரு எல்லா எட்த்துலயும் மின்க்குது....ஓ..கலீஞர் அய்யா ஒங்க ஆட்சியோட கவுண்ட் ட்வுன்னா அது ! ஒங்கள பத்திக்கூட மன்சுல பேச வேண்டிகீது...இப்ப தன்லட்சுமிக்கு காலேசி விட்ற டைமு...அதால அப்பால வர்றேன்..இப்ப கொஞ்சம் ஜூட்...!


-ராணாமோனா

5 Comments:

  • At 22.8.06 , Blogger லிவிங் ஸ்மைல் said...

    வா வாத்யாரே!

    என் வாழ்த்தும் வரவேற்பும் உனக்கு எப்பவும் கீது.. டோண்ட் ஒர்ரி சும்மா வூடு கட்டி அடி தல...

    வுன்னும் சீரியஸா நெர்யா மேட்டர் எழுது நைநா...

    இப்போதிக்கி அப்பீட் அட்சுக்றேன்...

    வர்ட்டா...!!!

     
  • At 23.8.06 , Blogger கார்த்திக் பிரபு said...

    vaanga vandh jodhiyila aikiyamaavunga

     
  • At 23.8.06 , Blogger RAANA MONAA said...

    ரொம்ப நன்றிங்க திருநங்கை,

    சும்மா லோக்க்ல் கலாசலுக்குதான் இந்த வேசம்,மத்தபடி சுத்த எலக்கியம்னா ரொம்ப இஸ்டம்.
    ஒங்க மரணம் படைப்பு சத்திமா என்ன காலி பண்ணிட்ச்சி,ஒங்களுக்கும் ஒரு ராஜபாட்டை கீது தூள் பண்ணுங்க..

     
  • At 23.8.06 , Blogger - யெஸ்.பாலபாரதி said...

    :)
    வாங்க தம்பி... வெல்கம் டூ தமிழ்வெளி!

     
  • At 28.8.06 , Anonymous Anonymous said...

    வணக்கம் நண்பரே உங்கள் பதிவுகள் நல்லாயிருக்கு என் தமிழில் இருந்து நான் யார் என்பதை கண்டுகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். உங்களிடம் இருந்து மேலும் நல்ல ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home